Published : 02,Mar 2018 08:31 AM
கிரண் பேடி - நாராயணசாமி ஹோலி கொண்டாட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் எதிரும் புதிருமானவர்கள். அரசின் முடிவுகளில் கிரண் பேடி தலையிடுவதாக நாராயண சாமி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று ஹோலிப் பண்டிகையையொட்டி கிரண் பேடியும், நாராயண சாமியும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். கிரண் பேடிக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பின்பு வர்ணம் பூசிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் சுவாட், டிஜிபி சுனில்குமார் கௌதம் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் பங்கேற்று
ஒருவருக்கொருவர் வர்ணம் பூசிக்கொண்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.