ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மயக்கநிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.25 மணிக்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு
சுவாச பிரச்னை, நோய்த்தொற்று மற்றும் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் தைராய்டு போன்றவையால் ஜெயலலிதா ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் ஆலோசனையின் படி, அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சையளித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட 5 மருத்துவர்களை கொண்ட குழு அப்பலோ மருத்துவமனையில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் மருத்துவர் கில்நானி தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்கான ஆலோசனைகளை நேரில் வந்து வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, அக்டோபர் 5-7, 9-10, 13-15 மற்றும் டிசம்பர் 2-3, 5 ஆகிய தேதிகளில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர், ஜெயலலிதாவிற்கு தவறான மருந்துகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று விளக்கமளித்துள்ள தமிழக அரசு, தேவையான மருந்துகள் தவிர வேறு எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
அப்பலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. அப்போலோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்ததாகவும்
குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு எற்பட்டதாகவும், இதய செயலிழப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அவரது இதயம் செயல்படவில்லை என்று தெரிந்தவுடன், இதயம் செயல்படவில்லை என உறுதிப்படுத்திய பின்னர் ஒ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பிதுரை, சசிகலா உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!