ஏப்ரல் 15ஆம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் அறிவித்துள்ளது.
கடனை திரும்ப செலுத்த முடியாததால் திவாலானதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.
தொலைபேசி சேவை சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக தொடர் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதனை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி நள்ளிரவுடன் ஏர்செல் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்குள் ஏர்செல் வாடிக்கையாளர்கள் எண்ணை மாற்றாமல், வேறு நெட்வொர்க்கிற்கு மாறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரைவாக வேறு நிறுவனங்களுக்கு மாறும் வகையில் யுனிக் போர்ட்டிங் கோடு எனப்படும் பிரத்யேக எண் குறியீடுகளை ஏர்செல் நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி