நடிகர் சந்தானம் அடுத்தும் ஹீரோவாகவே நடிக்க தயாராகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். இவரது ரைமிங் வசனம் மற்றும் டைமிங் பஞ்ச் போன்றவை இளம் சினிமா ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சி நடிகராக இருந்த சந்தானத்திற்கு வெள்ளித்திரை அள்ளிக் கொடுத்தது அதிகம். ஆனால் சில ஆண்டுகளாகவே அவர் காமெடி ரோலில் நடிப்பத்தை தவிர்த்துவிட்டார். அவரது கவனம் ஹீரோ பக்கம் தாவியது. அதற்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஒரு காரணம் என கூறப்பட்டது. அவரும் சில படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் அதிகம் வெற்றி பெறவில்லை. 2016 ஆண்டு அவர் நடிப்பில் வெளியான “ தில்லுக்கு துட்டு” படம் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. ராம்பாலா இதை இயக்கி இருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. மீண்டும் ராம்பாலாவே இதனை இயக்குகிறார். சந்தானம் தாடியுடன் புதிய கெட் அப்பில் இதன் பூஜையில் இன்று கலந்து கொண்டார். இப்படத்தில் தீப்தி ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளார். தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்க உள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 15 நாட்கள் ஹைதராபத்தில் நடைபெற உள்ளது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?