Published : 28,Feb 2018 03:31 PM

காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றாதீர்கள் ! - கமல்ஹாசன்

Kamal-Hassan-Statement-about-Cauvery-Water-and-Central-Minister

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை 6 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது செய்தியாளர்களிடம் பதிலளித்த மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலதாமதம் ஆகும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் 'நீதி'க்கு நீதி வேண்டும்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, நடைமுறைப்படுத்த இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியது கண்டனத்திற்குரியது. காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகாதீர்கள். அரசு தவறுகிற போது நீதிமன்றங்களுக்கு செல்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பையே மறுத்தால், எங்கே செல்வது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்