Published : 06,Mar 2017 10:40 AM

எலைட் சென்ஸ் மொபைல் அறிமுகம்

Swipe-Elite-Sense-With-4G-VoLTE-Support-Launched

டேப்லட் தயாரிப்பில் பிரபலமான ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனம், தற்போது எலைட் சென்ஸ் என்ற புதிய மாடல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் தொடுதிரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில் ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் முன்புற கேமிரா அமைந்துள்ளது.

எலைட் சென்ஸ் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெலோவ் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது. 3ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளீட்டு நினைவுத்திறன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. 2,500மி. ஆம்பியர் பேட்டரி தரத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது, 4ஜி தொழில்நுட்பம், Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ், மற்றும் ஒரு micro USB போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. எலைட் செஸ்- ரூ.7,499க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்