ட்விட்டரை போலவே வாட்ஸ் அப்பிலும் வருது டிக்மார்க்

ட்விட்டரை போலவே வாட்ஸ் அப்பிலும் வருது டிக்மார்க்
 ட்விட்டரை போலவே வாட்ஸ் அப்பிலும் வருது டிக்மார்க்

மிகப்பெரிய தகவல் பரிமாற்றம் செயலியாக இயங்கி வரும் வாட்ஸ் அப்பை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றன. ஒரு நாளைக்கு மில்லியன் யூசர்கள் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்து செல்வதாக ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. 
அதற்கான காரணம் என்னவென்றால் மற்ற செயலிகள் திறப்பதற்கும், பயன்பாட்டுக்கும் சிறிதளவு அவகாசம் எடுக்கும் நேரத்தில், வாட்ஸ் அப் உடனடியாக செயல்படுகிறது என்பதே ஆகும். இதன் இடையே வாட்ஸ்அப் செயலியை தனிநபர்கள் மட்டுமின்றி வியாபார நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மிகப்பெரிய செல்வாக்கை பெற்றிருக்கும் வாட்ஸ் அப் செயலி அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான அனைத்து முயற்சிகளை செய்து வருகிறது.

தற்போது நிறைய பிசினஸ்கள் வாட்ஸ்அப் மூலம்தான் இயங்கி வருகிறது. இதனை நன்கு அறிந்த வாட்ஸ் அப் நிறுவனம் ”பிசினஸ் வாட்ஸ்அப்” என்ற புதிய செயலியை கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. இதன் இடையே வாட்ஸ்அப் மூலம் இயங்கும் பிசினஸ்கள் அனைத்தும் நம்பகத்தன்மை உடையதா என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்துள்ளது. இதன்மூலம், பிசினஸ் வாட்ஸ்அப்பில் பதிவு செய்யும் நிறுவனங்களின் வெப்சைட்டை சரிபார்த்து, நிறுவனங்களுக்கு பச்சை நிற பேட்ஜை தரலாமா வேண்டாமா என்று வாட்ஸ்அப் நிறுவனம் முடிவுசெய்யும்.   

இந்த வசதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. சோதனை மட்டுமே நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி நம் மொபைலுக்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இவையனைத்தும் பலக் கட்ட சோதனைகளுக்குப் பின்னரே முடிவு செய்யப்படும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com