ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதன் தென்னிந்திய சி.இ.ஓ சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். ஆத்திர அவசரத்திற்குக் கூட மற்றவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார். பின்னர், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்து பின்னர் ஆன் செய்ததையடுத்து சிக்னல் கிடைக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதன் தென்னிந்திய சி.இ.ஓ சங்கர நாராயணன் இன்று தெரிவித்துள்ளார். இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஏர்செல்லை பலரும் கைவிட்டு வரும் நிலையில் ஏர்செல்லின் இந்த அறிவிப்பு அதற்கு மேலும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி