[X] Close

“இப்படி ஒரு தலைப்பா?” ஷாக் ஆன சிம்பு

simbu-surprise-video-for-yenda-thalaiyila-yenna-vekkala

“இப்படி ஒரு தலைப்பா என நான் ஷாக் ஆனேன்” என்று சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமானவர் அசார். இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் தலைப்பை பற்றியும் அதில் நடித்துள்ள அசார் குறித்தும் சிம்பு ஒரு வீடியோ பதிவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. அப்பதிவில் சிம்பு, “இப்படியெல்லாமா ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பாங்கணு ஆச்சர்யப்பட்டேன். அந்தப் படத்தில் நடித்துள்ள அசாருக்கு என் வாழ்த்துகள். இளம் திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை நான் அடையாளம் கண்டு பாராட்டுவேன். அது எனக்குப் பிடிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். சிம்புவின் இந்த ‘அன்பான’ மனதை, அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close