ஜெயேந்திரர் உடனான புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி

ஜெயேந்திரர் உடனான புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி
ஜெயேந்திரர் உடனான புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும், முன்பு ஜெயேந்திரர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,“ காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவால் வேதனை அடைந்தேன். ஜெயேந்திரரின் முன்மாதிரியான சேவை, நல்ல எண்ணங்களால் லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com