[X] Close

கார்த்தி சிதம்பரம் கைதில் பாஜக அரசுக்கு தொடர்பில்லை: சுப்ரமணியன் சுவாமி

Karthi-Chidambaram-Arrest--Subramanian-Swamy-Comments

ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ததில் பாஜக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக புதியதலைமுறையிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி,  “ கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பாஜக அரசு தொடரவில்லை. நான்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்டது. இதில் பாஜக அரசை குறைக் கூறமுடியாது. பாஜகவில் மூத்த அமைச்சர்கள் இருவர் உதவி வந்தனர். இந்த வழக்கில் பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை முதலில் கைது செய்ய வேண்டும்.அவர் கையெழுத்து போட்டதால்தான் முறைகேடு நடந்துள்ளது.” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். பிரிட்டனிலிருந்து இன்று காலை எட்டு மணியளவில் சென்னை திரும்பியபோது அவர் கைதானார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close