Published : 28,Feb 2018 05:35 AM

டெல்லி அழைத்து செல்லப்படுகிறார் கார்த்தி சிதம்பரம் 

Karthi-Chidambaram-is-being-taken-to-Delhi

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய நிலையில் அவரை சிபிஐ கைது செய்தது. சென்னை விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கார்த்தி சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார். டெல்லி நீதிமன்றத்தில் மாலை 4மணிக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  கடந்த 16-ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்