[X] Close

தமிழகத்தில் ராணுவ தொழிற்பேட்டை 

Military-Industrial-Estate-in-Tamil-Nadu

 


Advertisement

தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை தளவாடங்களை தயாரிப்பதற்கான தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை தொடங்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத்துறை தளவாடங்களை தயாரிப்பதற்கான இரண்டு தொழிற்பேட்டைகளை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு பாதுகாப்புத்துறை தளவாட தொழிற்பேட்டையை தமிழகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பையடுத்து, பணிகளை விரைந்து தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

இந்த தொழிற்பேட்டையை, நாற்கர வடிவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, ஓசூர், கோவை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த நாற்கர தொழிற்பேட்டை அமையும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில்முனைவோருடன் ஆலோசனை ந‌டத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, வரும் 5 ஆம் தேதி கோவையிலும், 7 ஆம் தேதி சேலத்திலும், ‌பத்தாம் தேதி சென்னையிலும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. திருச்சியில் ஆலோசனை நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூரில் ஏற்கனவே ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புத்துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை இந்த தொழிற்பேட்டை வழங்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close