[X] Close

ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் முடிந்தது !

sridevi-embalming

துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது மரணமடைந்தார்.
ஸ்ரீதேவியின் உடலை காண மும்பையில் உள்ள அவரது வீட்டின் மூன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது.
இந்நிலையில் உடற் கூறு ஆய்வறிக்கையில் அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஆல்கஹால் படிமங்கள் இருந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து துபாய் அரசியல் சட்ட நடைமுறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வர காலத்தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பையில் அவரது வீட்டின் முன்பும், மைத்துனர் அனில் கபூரின் வீட்டின் முன்பும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பின்பு இன்று பிற்பகல் இந்திய நேரப்படி ஸ்ரீதேவியின் உடல் அவரது கணவர் போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது  ஸ்ரீதேவியின் உடலுக்கு முறையாக எம்பாமிங் செய்யப்பட்டு அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது.

இதனையடுத்து அவரின் உடல் இன்று இரவு தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படவுள்ளது. பின்பு, நாளை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close