
நடிகை அமலா பால் தன் கண்களை தானாமக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி சிலை அருகே புதிதாக இன்று தொடங்கப்பட்ட அகர்வால் கண் மருத்துவமனை துவக்க விழாவில் நடிகை அமலா பால் கலந்துக்கொண்டார்.
பின் அமலாபால் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது, கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின் அவர் கூருகையில் உலகளவில் இந்தியாவில்தான் கண் பார்வையற்றோர் அதிகம். இது புள்ளி விவரம் தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். அதன்பின் அமலாபால் தனது கண்களை தானம் செய்வதகாவும் கூறினார். பின் அதற்கான படிவத்தில் அவர் கையெழுத்திட்டு, தன் கண் தானத்தை உறுதி செய்தார்.