Published : 06,Mar 2017 08:35 AM

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: எய்ம்ஸ் அறிக்கை

AIMS-Submit-Jayalalitha-Medical-Report

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐந்து முறை அப்போலோவுக்கு வந்து ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைக் கோரியது. இதனையடுத்து தமிழக அரசிடம் 5 அறிக்கைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்தது . தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குநர் வி.ஸ்ரீனிவாஸ் அறிக்கையை அளித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்