[X] Close

காயத்திலும் சக வீரர்களை உற்சாகப்படுத்திய கோலி

Injured-Virat-Kohli-Gives-Head-Massage-To-Shikhar-Dhawan-During-3rd-T20I

காயம் காரணமாக விராட் கோலி போட்டியிலும் பங்கேற்காவிட்டாலும், சக வீரர்களை அவர் உற்சாகப்படுத்திய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.


Advertisement

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும், 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இதனையடுத்து, இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்றாது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்வில்லை. ரோஹித் ஷர்மா தலைமையில் தான் இந்திய அணி களமிறங்கியது.


Advertisement

இந்நிலையில் போட்டியில் காயம் காரணமாக தான் ஆடவில்லை என்றாலும் சக வீரர்களை உற்சாகப்படுத்த விரோட் கோலி தவறவில்லை. கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது, சக வீரர் ஷிகர் தவானுக்கு விராட்கோலி தலையில் மசாஜ் செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. விராட் கோலி தனது கைகளால், ஷிகர் தவானின் டென்ஷன் தீர மெதுவாக தேய்த்து விடுகிறார். இதனால் போட்டியில் பங்கேற்காவிட்டாலும் கோலி தன் பங்கை சரிவர செய்திருப்பதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். மைதானத்தில் எப்போதுமே ஷிகர் தவானுக்கும் விரோட் கோலிக்கும்நல்ல கம்பெனிஷிப் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close