விஷால் எனப்பெயர் வைத்துக்கொண்டு உடம்பு முழுவதும் விஷம் வைத்துள்ளார் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் விஷால், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ராதாகிருஷ்ணன், கேயார், கலைப்புலி சேகரன் ஆகியோர் தலைமையில் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணியும் தனித்தனியாக அணி அறிவிப்பை நடத்தின. விஷால் தலைமையிலான அணியினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது தற்போதைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பற்றி குறை கூறி பேசினர். இதில் ஆவேசமடைந்த தயாரிப்பாளர்கள் சிலர், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடிகர் விஷாலை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய தாணு, தயாராப்பாளர்கள் சங்கம் என்ன கஷ்டத்தை உங்களுக்கு கொடுத்தது? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒற்றுமை இல்லை என ஏளனம் செய்வதும், எள்ளி நகையாடுவதும் தவறு’ என்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி கூறும்போது, ’கால்ஷீட் கொடுத்து ஒழுங்கா நடிக்க போங்க. கூட்டு குடும்பமாக நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். மொழி, இனம், மதம் வாரியாக பிரிவினையைத் தூண்டும் விதமாக உங்கள் பேச்சு அமையலாமா? நீங்கள் திருந்திக் கொள்ளவேண்டும், திருத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.
பின்னர், நடிகர் விஷால் அவர்கள் நடிகர் சங்கத்தைச் சுடுகாடாக மாற்றிவிட்டார் என்றும், 40 வயதாகிறது, சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்த தாணு, விஷால் எனப் பெயர் வைத்துக்கொண்டு உடம்பு முழுவதும் விஷம் வைத்துள்ளார் என கூறினார். நடிகர் நாசருக்கு விஷாலால் அவமானம் மட்டுமே மிஞ்சும் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்