ஜெயலலிதா கையில் இரட்டைக் குழந்தைகள்

ஜெயலலிதா கையில் இரட்டைக் குழந்தைகள்
ஜெயலலிதா கையில் இரட்டைக் குழந்தைகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரட்டைக்குழந்தைகளோடு போஸ் கொடுக்கும் புதிய புகைப்படங்கள் முகநூலில் பரப்பரப்பை உருவாக்கி உள்ளது.

பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த தினம். இதே நாளில் பிறந்த தன் இரட்டைக் குழந்தைகளை சசிகலாவின் உறவினரும் இளவரசியின் மகளுமான கிருஷ்ணப்ரியா தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் படங்களை பார்த்த முகநூல்வாசிகள் அதனை பரபரப்பாக்கி வருகிறார்கள்.

கிருஷ்ணப்ரியா இன்று 5 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்படங்களில் ஜெ, தன் கைகளில் இரட்டைக் குழந்தைகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். மற்றொரு படம் கிருஷ்ணப்ரியாவின் வளைகாப்பின் போது எடுக்கப்பட்டது. அதில் ஜெ, தனது கரங்களால் கிருஷ்ணப்ரியாவுக்கு வளையல் அணிவிக்கிறார். இந்தப் படங்கள் எவையும் ஜெ. உயிருடன் இருக்கும் வரை வெளியாகாதவை. அதில் ஜெ. மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் அத்தனை மகிழ்ச்சியோடும் காணப்படுகிறார். இப்படங்களை வெளியிட்டுவிட்டு கிருஷ்ணப்ரியா தனது முகநூலில், “அன்று எனது கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்த நாளும் இன்றே. மறக்க இயலாத பல நினைவுகளை தன்னுளடங்கிய தினம், இத்தினம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com