சேவை பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.
ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் இணைப்புகள் செயல் இழந்ததால் கடந்த 3 தினங்களாக அதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். செல்போனில் யாரையும் அழைக்க இயலாததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பலர், ஏர்செல் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
3 தினங்களுக்குப் பிறகு தற்போது ஏர்செல் சேவை சீரடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் அழைப்புகள் தங்களின் செல்போல் எண்களுக்கு அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளதாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி