நிரவ் மோடியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் பிரியங்கா சோப்ரா

நிரவ் மோடியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் பிரியங்கா சோப்ரா

வங்கி மோசடியில் சிக்கிய நிரவ் மோடியின் நிறுவனத்தின் விளம்பரத் தூதருக்கான ஒப்பந்தத்தை நடிகை பிரியங்கா சோப்ரா ரத்து செய்துள்ளார்.

நிரவ் மோடி நிறுவனத்தின் விளம்பரப்படங்களில் நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து நடித்து வந்தார். அதற்காக நிரவ் மோடி நிறுவனத்துடன் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்திருந்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளையில் ரூ.11,400 கோடி மோசடி செய்துவிட்டு நிரவ் மோடி தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டார். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.  

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா அவரது நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளார். ‘நிரவ் மோடிக்கு எதிராக வங்கி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரது பிராண்டுகளின் விளம்பரத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வது என பிரியங்கா சோப்ரா முடிவு செய்துள்ளார்’ என்று அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com