[X] Close

துல்கர் சல்மானின் பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?

Rakshan-Act-Dulquer-Salmaan-25th-Film--Kannum-kannum-kollaiyadiththaal-

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடிப்பதாக துல்கர் தெரிவித்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தனது 25வது படத்தை தமிழில் நடித்து வருகிறார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என தலைப்பிடப்பட்டுள்ள, இப்படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி உலக காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை உங்களிடம் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். அந்தக் கதாபத்திரத்தின் பெயர் கேலிஸ். அந்தப் பாத்திரத்தில் எனது பெஸ்ட் ப்ரெண்ட் நடித்துள்ளார். அது உங்கள் ரக்‌ஷன்” என்று கூறி தனியார் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரக்‌ஷனி அறிமுகம் செய்கிறார். அப்போது ரக்‌ஷன் பட தலைப்பை முணுமுணுக்க, க்ளியரா சொல்லு என சல்மான் மிரட்டுகிறார். பின்னர் படத்தின் தலைப்பை ரக்‌ஷன் தெளிவாகச் சொல்கிறார். அந்த வீடியோ இப்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close