[X] Close

ஷங்கரின் ‘இந்தியன்2’வில் அஜய் தேவ்கன்

Shankar-to-rope-in-Ajay-Devgn-for----Indian-2---

ஷங்கரின் ‘இந்தியன்2’ படத்தில் பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

1996ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இந்தப் படம் லஞ்சத்தை ஒழிக்கும் வழிமுறைகளை மிக தீவிரமாக பேசியிருந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் இருவேறு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். மணிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை அடைந்தது.

இந்நிலையில் ‘இந்தியன்2’வை எடுக்க உள்ளதாக தைவானில் ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு ஷங்கர் அறிவித்திருந்தார். அதற்கான ப்ரீ புரடெக்‌ஷன் வேலைகளை ஷங்கர் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன் இணைய இருப்பதாக தெரிய வந்துள்ளது. கமலுடன் அவர் சேர்ந்து மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் நடிகை நயன்தாரா இப்படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close