[X] Close

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 கொடூரர்கள் கைது!

Thiruvarur-Child-Harassment-Case--2-Youngster-Arrested

திருவாரூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சேரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஜீவன் ஆகிய இரு இளைஞர்கள் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து விபர மறியாத அந்தச் சிறுமி, வயிற்றுவலி எடுப்பதாக தனது தயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதித்த அவரது தாயார், தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விபரத்தை தெரிந்துக் கொண்டுள்ளார். மேலும் விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர்கள் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த போலீஸார், முத்துக்கிருஷ்ணனையும், ஜீவனையும் கைது செய்து நன்னிலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் மார்ச் 7ம் தேதிவரை தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close