Published : 22,Feb 2018 06:57 AM

ஆப்ரேஷனில் ஆட்டம் காட்டி ரூ.17 லட்சம் கேட்கும் மருத்துவமனை

Police-complaint-against-private-hospital

அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டியும், சிகிச்சைக்காக ரூபாய் 17 லட்சத்தை கட்டணமாக கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர் சாவித்ரி தேவி. இவர் உடல் நலக்குறைவால் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு பித்தப் பையில் கல் இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.  அதன்படி அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. ஆனால் அடுத்த நாளே சாவித்ரி தேவிக்கு அதிகப்படியான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சாவித்ரி தேவியை மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது குடல் சேதமடைந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், சாவித்ரி தேவிக்கு தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முடிவில் மாரடைப்பு காரணமாக சாவித்ரி தேவி பரிதாபமாக மரணமடைந்திருக்கிறார். இதற்கு மொத்தமாக ரூபாய் 17 லட்சத்தை கட்டணமாக சாவித்ரி தேவியின் மகனிடம், மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாகவும் அதிகப்படியான கட்டணத்தை கேட்பதாகவும் அந்த மருத்துவமனை மீது சாவித்ரி தேவியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனிடையே இந்தக் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்