தென்னாப்பிரிக்காவில் ரன் குவிக்க முடியாமல் போனது ஏன் என்பதற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தமிழக வீரருமான முரளி விஜய் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. நிலைத்து நின்று அதிக ரன்கள் குவிக்கவில்லை. சரியான ஷாட்களை தேர்வு செய்து ஆடாததுதான் அதற்கு காரணம். அதோடு தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசி திறமையாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அவர்களின் ஆடுகளமும் வித்தியாசமாக இருந்தது. அங்கு சில அனுபவங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாட்டில் வெற்றி பெறுவது ஸ்பெஷலான ஒன்று. இந்திய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியிருப்பது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்காக, தமிழ்நாட்டு அணியில் நான் ஆடாதது சர்ச்சையாக்கப்பட்டு விட்டது. மும்பைக்கு எதிரான அந்த முக்கியமான போட்டியில் ஆடியிருக்க வேண்டும். காயம் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது. இதுபற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தேன். இருந்தும் எனது அர்ப்பணிப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்திருக்கிறது.
தமிழ்நாட்டு அணிக்காக விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். அதை பெருமையாகவே நினைக்கிறேன். இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் விரைவில் பேசுவேன். ரஞ்சி போட்டியில் தமிழகம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதில்தான் இப்போது என் கவனம் இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு முரளி விஜய் கூறினார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்