Published : 21,Feb 2018 01:05 PM

சிங்கத்தின் குகையில் நுழைந்த மனிதன்

Kerala-man-jumps-into-lion-enclosure-in-Thiruvananthapuram-zoo

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் காவலர்கள் அசந்த நேரத்தில் சிங்கத்தின் குகைக்குள் ஒரு நபர் புகுந்துவிட்டார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு 5 அடி உயர தடுப்பு சுவருடன் கூடிய சிங்கத்தின் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டிக் குதித்த நபர் ஒருவர் பெண் சிங்கம் வசிக்கும் குகைக்கு அருகே குரங்கை போல தவழ்ந்தவாறு சென்றுள்ளார். இதைப் பார்த்து அச்சமடைந்த பார்வையாளர்கள் பாதுகாவலரை அழைத்தனர். சத்தம் கேட்டு வந்த பாதுகாவலர்கள் சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பி அந்த நபரை மீட்டனர். இந்தக் காட்சியை வீடியோவாக ஒருவர் படம்பிடித்துள்ளர். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த நபர் பாலக்காட்டைச் சேர்ந்த முருகன் என்றும், அவரை இரண்டு நாட்களாக காணவில்லை என செய்தித் தாள்களில் அவரது குடும்பத்தினர் விளம்பரம் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடைபெற்று வருகிறது.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்