
நாட்டைக் கொள்ளையடிப்பவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டியது அவசியம் என பிரதம் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது நாளாக பரப்புரை பேரணியை மேற்கொண்ட மோடி, பேரணியின் முடிவில் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். ஏராளமான இயற்கை வளங்களை கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு வழங்கும் நிதியை அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசு முறையாகப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.