ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் அவரது சகோதரர் முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் ஆசி பெற்றார்.
ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல்ஹாசன், இன்று புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்குகிறார். அதன்படி ராமேஸ்வரத்தில் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்றார் .அங்கு கலாமின் பேரன் சலீம் கமலை வரவேற்று அழைத்துச் சென்றார். கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றையும் கமலிடம் அவர் வழங்கினார். அவரது இல்லத்தில் கலாமின் மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். வீட்டில் இருந்த அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். பின்னர்,கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வெளியில் இருந்தே பார்வையிட்டார்.
முன்னதாக கமலின் இன்றைய திட்டத்தில், காலை 7.45 மணி அளவில் அப்துல்கலாம் இல்லத்திற்கு செல்வதாகவும் அதன்பின்னர் 8.15 மணிக்கு கலாம் படித்த பள்ளியில் மாணவர்களை சந்தித்து உரையாடுவதாக இருந்தது. இதனிடையே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு நடிகர் கமல்ஹாசன் செல்வதற்கு, மண்டபம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதி மறுத்திருந்தார். இது தொடர்பாக அவர் அவர் கையெழுத்திட்டுள்ள அனுமதி மறுப்பு கடிதத்தில், அரசியல் இயக்கத்தினர் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கமல் வருகைக்கு அனுமதி தர இயலாது எனத் தெரிவித்திருந்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்