Published : 05,Mar 2017 03:14 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு ....டெல்லியில் தமிழர்கள் பேரணி

tamil-peoples-protest-in-delhi

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டெல்லியில் தமிழர்கள் பேரணி நடத்தினர். புதுக்கோட்டை‌ மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மக்கள் போராடி வருகின்றனர்.

நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்தப் பேரணி, டெல்லி மண்டி ஹவுஸில் தொடங்கி ஜந்தர் மந்தரில் நிறைவடைந்தது. தமிழ் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்வில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்‌க வேண்டும் என்‌பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்