Published : 20,Feb 2018 11:10 AM

காதலியை கத்தியால் குத்திய காதலன்: பூங்காவில் பரபரப்பு

Love-Couple-s-Knife-Attack-between-both-in-Chennai-AnnaNagar-Tower-Park

சென்னையில் உள்ள பூங்காவில் காதலியை காதலன் கத்தியால் குத்தியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவுக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் காதலர்கள் வருகை தருகின்றனர். இதனால் எப்போதும் இந்தப் பூங்கா பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இன்று அங்கு வந்த காதல் ஜோடி ஒன்று, பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென காதலன் காதலியை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ந்து போன, மக்கள் அவர்களை தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் குத்துப்பட்ட காதலன் ராஜேஷ் சோழவரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் பூங்காவில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்