Published : 20,Feb 2018 02:24 AM

தோனிக்கு பந்துவீசுவதில் மகிழ்ச்சி: மிட்செல் சாண்ட்னெர்

Happy-to-bowling-to-dhoni-in-csk-nets

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பந்துவீசுவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னெர் தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னெர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சாண்ட்னெர்,  போட்டியின் போது தோனிக்கு பந்துவீசுவதை விட வலைப்பயிற்சியில் பந்துவீசுவதை  நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்ற பல அனுபவமுள்ள வீரர்களுடன் இணைந்து விளையாடவுள்ளது உற்சாகத்தை அளிக்கிறது. இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் மூலம் சென்னை குடும்பத்தில் சேர விரும்புகிறேன்.

ஐபிஎல் உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் போட்டியாகும். இங்கு அரங்கில் கூடியிருக்கும் ரசிகர்கள் முன்னிலையில் எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். சிஎஸ்கேவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன். நான் இந்தியாவில் பந்துவீசுவதை விரும்புகிறேன். இங்குள்ள சூழ்நிலைகள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்