Published : 19,Feb 2018 04:10 PM

ட்விட்டரில் வார்த்தைப் போர் - கிப்ஸை மோசமாக கலாய்த்த அஸ்வின்

Not-a-fixer-like-you-R-Ashwins-cheap-jibe-at-Herschelle-Gibbs-harmless-banter-has-Twitterati-fuming

ட்விட்டர் தளத்தில் இந்திய வீரர் அஸ்வின், தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸ் இடையே காரசார வார்த்தைப் போர் நடந்தது. 

இந்த ட்விட்டர் விவாதம் தொடங்கிய அஸ்வினுடைய ஷூ விளம்பரத்தில்தான். அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஷூ விளம்பர வீடியோவை  பதிவிட்டுள்ளார். அதோடு விடாமல், ஷூவை புகழ்ந்து ஒரு ட்விட்டும் போட்டுள்ளார். அஸ்வின் பதிவிட்ட ஷூ விளம்பரத்தை கலாய்த்து பலரும் ட்விட் செய்தார்கள். அதில், கிப்ஸ் செய்த ட்விட்டில் அஸ்வின் லேசாக டென்ஷன் ஆகிவிட்டார் போல. அப்படி அஸ்வினை டென்ஷன் ஆகும்படி செய்த ட்விட்டில், ‘இந்த ஷூவை போட்ட பின்னராவது நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் என்று நம்புகிறேன்’ என கிப்ஸ் கலாய்த்து இருந்தார்.

          

கிப்ஸின் ட்விட்டருக்கு அஸ்வின் அளித்த பதிலில், ‘உங்களைப் போல் நான் வேகமாக ஓடவில்லை நண்பரே. துரதிருஷ்டவசமாக நான் உங்களைப் போல் ஆசிர்வதிக்கப்படவில்லை. ஆனால், மேட்ச் பிக்ஸிங் செய்யாமல் உழைத்து உண்ணும் நெறி கொண்ட மனதால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்’ என்று தடாலடியாக பேசிவிட்டார். 

மேட்ச் பிக்ஸிங்கை குறிப்பிட்டு அஸ்வின் பேசியது தன்னை காயப்படுத்திவிட்டதால், இந்த உரையாடலில் இருந்து விலகுவதாக கூறி கிப்ஸ் முடித்துக் கொண்டார். கிப்ஸின் பதிலை கண்ட அஸ்வின், தான் ஒரு ஜோக்காக தான் கூறினேன் என்று பதிலளித்தார். அஸ்வின் இந்த விளக்கத்தை கிப்ஸ் மட்டுமல்ல, அந்த உரையாடலில் பங்கேற்ற பலரும் கூறினார். அஸ்வினை கலாய்த்தும் தள்ளிவிட்டார்கள்.

          

இந்திய அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக வலம் வந்தவர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின். தற்போது, ஜடேஜா, அஸ்வினுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. டெஸ்ட் தொடர்களில் மட்டும் தான் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக சாஹல், குல்தீப் யாதவ் சுழல் கூட்டணி இந்திய அணியில் அசத்தி வருகிறது. 

          

சாஹல், குல்தீப் யாதவ் சுழல் கூட்டணியை குறிப்பிட்டும் பலரும் அஸ்வினுக்கு பதிலடி கொடுத்தனர். தொடக்கத்தில் கிப்ஸின் முதல் ட்விட்டை விமர்சித்துதான் ட்விட்கள் குவிந்தது. பின்னர், அஸ்வினின் ட்விட்டை பார்த்து பலரும் முகம் சுழித்தது போல் உணர்ந்து கலாய்த்து தள்ளிவிட்டார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்