
நியூஸிலாந்துக்கு எதிரான 6 வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இடையே முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையே இன்று 6வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் இயான் மார்கன் 80, டேவி மாலன் 53 மற்றும் ஜேசன் ராய் 21 ரன்கள் குவித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதைத் தொடர்ந்து 195 என்ற இலக்கை துரத்தி வெற்றிப் பெறும் முனைப்போடு பேட்டிங் செய்ததது. ஆனால் நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் குப்டில் 62, முன்ரோ 57 மற்றும் சாப்மேன் 37 ரன்கள் எடுத்தனர். 4 விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்திருந்தாலும், இங்கிலாந்து திறமையான பந்துவீச்சால் நியூஸி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றிப் பெற்றது.