[X] Close

ரவுடி பிறந்த நாள் விழாவில் காவல் ஆய்வாளர்

Salem-Inspector-Punished-for-Attending-Birthday-party

சேலத்தில் ரவுடி ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற காவல் ஆய்வாளர் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.


Advertisement

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுசீந்திரகுமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளில் தண்டனை பெற்றவர். கடந்த 3 நாள்களுக்கு முன்பு, சுசீந்திரகுமார் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதில் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் கருணாகரன் கலந்து கொண்டதோடு, சுசீந்திரகுமாருக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. 


Advertisement

இதுகுறித்து விசாரித்த சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், ஆய்வாளர் கருணாகரனை இடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணை முழுமையடைந்த பிறகு, ஆய்வாளர் கருணாகரன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்குமெனத் தெரிகிறது.

சென்னையில் ஏராளமான காவல்துறையினர் ஒரே நாளில் அதிகமான ரவுடிகளைச் சுற்றிவளைத்து கைது செய்த சாதனை நிகழ்ந்த சில தினங்களிலேயே, ரவுடி ஒருவரோடு காவல் ஆய்வாளர் ஒருவர் நெருக்கம் காட்டிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close