ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் பொதுமக்களைக் குறி வைத்து தொடர்ச்சியாகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் பயங்கரவாதிகள் 3 பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கொடூர தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உட்பட அப்பாவி பொதுமக்கள் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மீன்மார்க்கெட் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான பாதுகாப்பு படை போலீசார் குவிந்திருந்தனர். போகோ ஹாரம் தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 26 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நைஜீரிய அரசு போகோ ஹாரம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Loading More post
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!