
ஒரே ஒரு பாடல் தான் ஒட்டு மொத்த தமிழ் ரசிகரையும் மட்டுமல்லாமல் அகில இந்திய இளைஞர்களையும் கவர்ந்து விட்டார் ப்ரியா வாரியர். இவரின் புருவ நடனத்திற்கு அடிமையான நெட்டிசன்கள் நாள்தோறும் ப்ரியாவின் அழகை புகழ்பாடிய சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்குகின்றனர். இந்நிலையில் கூகுளில் அதிகமாக தேடப்படும் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி ப்ரியா வாரியர் முன்னிலையில் உள்ளார். இதில் சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி முந்தியதில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளார் ப்ரியா வாரியர்.
இப்படி இருக்க, பிரபல நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள தகவலில் நடிகை சன்னி லியோனை விட அதிகமான பேர் ப்ரியா வாரியரை தேடியுள்ளனர் என்பதை தெரிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற பயன்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியிருக்கிறது.