Published : 16,Feb 2018 03:08 AM

ரயில்வேயில் 90,000 பணியிடங்கள்: ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Rlys-announces-mega-recruitment-drive--around-90K-posts-on-offer

ரயில் ஓட்டுநர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்ட 90,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட குரூப் சி பிரிவிலும், குரூப் சி ஒன்றாம் நிலையிலும் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும் ஐடிஐ சான்றிதழும் போதுமானது என கூறப்பட்டுள்ளது. 


இதற்கான அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் சி பிரிவு பணிகளுக்கு மார்ச் 5ம் தேதி வரையிலும், குரூப் சி ஒன்றாம் நிலை பணியிடங்களுக்கு மார்ச் 12ம் தேதி வரையும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்