Published : 05,Mar 2017 05:11 AM
பெட்ரோல் விலையை குறைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

’பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘பால் விலை உயர்வையும் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் இல்லை’என்றும் கூறினார்.