Published : 15,Feb 2018 01:58 AM
ஐபிஎல்: முதல் போட்டியில் ’தல’ தோனி,ரோகித் மோதல்!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடருக்கு ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பதினோறாவது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. இதனால், இந்த வருட போட்டிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. மே மாதம் 27-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப் நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.