விவாகரத்துக்கு பிறகு டூயட் பாடினார் டிடி

விவாகரத்துக்கு பிறகு டூயட் பாடினார் டிடி
விவாகரத்துக்கு பிறகு டூயட் பாடினார் டிடி

விவாகரத்து ஆன பிறகு தொகுப்பாளினி டிடி முதன்முறையாக டுயட் பாடியிருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக ஒரிஜினல்ஸ்’கம்பெனி சார்பில் ‘லஷ்மி’ என்ற குறும்படம் யுடியூப்பில் வெளியாகி இருந்தது. அந்தப் படம் மாபெரும் விவாதத்தை அடைந்ததை அடுத்து ‘மா’ குறும்படம் வெளியிடப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. இதனை தொடர்ந்து காதலர் தின வெளியீடாக ’உலவிரவு’ என்ற காதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி நடித்துள்ளார். அவருடன் ஜோடியாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். திருமணமான பின் அவர் தொலைக்காட்சி தொப்பாளராக வருவதையே தவிர்த்து வந்தார். அதன் பின் அவருக்கு விவாகரத்து ஆனது. ஆகவே அவர் அதிகம் வெளி உலகத் தொடர்பில்லாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில்தான் ‘உலவிரவு’ வெளியாகி உள்ளது. பொதுவாக கெளதம் மேனன் தனது படைப்புகளுக்கு மிக அழகான தமிழ்த் தலைப்புகள் வைப்பார். அதைபோல இந்தக் காதல் பாடலுக்கு ‘உலவிரவு’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதற்கு ஏற்கெனவே உறவில் இருக்கும் இருவர் சேர்ந்து கழிக்கும் அழகான இரவு அல்லது மாலைப் பொது என்று அர்த்தமாம். இதுவல்ல இப்போதைய விஷயம். விவாகரத்திற்கு பிறகு மிக நெருக்கமாக ரொமான்ஸ் காட்சியில் நடித்திருப்பதுதான் தற்போதைய வைரல். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com