Published : 14,Feb 2018 02:20 AM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு

Protest-against-Tuticorin-Sterlite-Plant

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிராக 2ஆவது நாளாக நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையினரின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 271 பேரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பேராசிரியர் பாத்திமா பாபு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவையடுத்து அவர்கள் 8 பேரும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் தங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்