[X] Close

முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதிய உத்தரவு!

Chennai-High-Court-order-to-file-case-on-Bharathiraja-if-any-True

இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து மத கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என விமர்சித்தும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் எனவும் பேசியிருந்தார்.

மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதமாகவும், இந்திய இறையண்மைக்கு எதிராகவும், இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் பாரதிராஜா பேசியதாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா மீதான புகாரை விசாரிக்கவும், முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close