[X] Close

தலை ஒருபக்கம்.. உடல் ஒருபக்கம்.. சாலையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்..!

man-murdered-near-kancheepuram

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே ஒருவரை வெட்டிக் கொலை செய்து தலையை ஜிஎஸ்டி சாலையின் அருகே வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.


Advertisement

பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிளாஸ்டிக் பை ஒன்றை வீசிவிட்டு சென்றிருக்கின்றனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் தலையை மீட்ட நிலையில், துண்டிக்கப்பட்ட உடலை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் கண்டெடுத்தனர்.

கொலையானவர் கோனாதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பாலாஜி என்றும் அவர் மீது பல வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close