Published : 04,Mar 2017 12:17 PM
கன்னடமும் தமிழும் திராவிடத் தாயின் இரு குழந்தைகள்: வைரமுத்து

கன்னடமும் தமிழும் திராவிடத் தாயின் இரு குழந்தைகள் என கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கன்னட இலக்கிய, கலாச்சார கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், இரு மாநில மக்களும் தோழமை உணர்வுடன் வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கன்னடம் என்பது சமஸ்கிருத மொழியின் குழந்தை என நீண்டகாலமாக சொல்லப்பட்டு வந்த கருத்து இப்போது உடைக்கப்பட்டிருக்கிறது என்றும், அது தமிழின் குழந்தை எனவும் கூறினார். காவிரியின் மீது மேகதாதுவில் அணைக்கட்டும் போது தமிழர்கள் கலங்குகிறார்கள் என்றும், அரசியல், மதம் இரண்டையும் கழித்து விட்டால் நம் நட்பை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.