Published : 10,Feb 2018 12:39 PM

தனுஷின் ஹாலிவுட் படம் எப்போது  ரிலீஸ்?

Release-date-out-for-Dhanush-s-Hollywood-movie-

தனுஷின் ஹாலிவுட் படம் எப்போது வெளியாகவுள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷின்‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகீர்’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், “இப்போது டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது என்னுடைய முதல் ஆங்கிலப்படம். உண்மையில் இது அசாதாரணமான பயணம்” என குறிப்பிட்டுள்ளார். ஹாலிவுட்டில் இதன் விற்பனை அமோகமாக இருப்பதாகவும் தெரிகிறது. அதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தங்களின் நாயகன் ஹாலிவுட் அளவுக்கு முன்னேறி இருப்பதால் பெருமையோடு இப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர். 

இதனை மிகச் சிறப்பான எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் அட்வென்ச்சர் படம் என இயக்குநர் விவரித்துள்ளார். இதன் டீசர் வெளியானதை அடுத்து வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்