[X] Close

தனுஷ்கோடியில் குவிந்த ஆஸ்திரேலிய பறவைகள்

Australian-birds-accumulated-in-Dhanushkodi

 

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ள நிலையில், பறவைகளை வேட்டையாடினால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏராளமான பறவைகள் வரத்துவங்கியுள்ளன. இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் கூறுகையில்,  “பிளம்மிங்கோ என்ற பூநாரைகள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில்தான் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோயில் பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக பிப்ரவரி மாதத்தில் இந்தப் பறவைகள் வந்துள்ளன. இப்பகுதியில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்” என தெரிவித்தனர்.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close