இனி கீரையும் வீடு தேடி வரும்: மதுரை ஐடி இளைஞரின் அசத்தல் முயற்சி

இனி கீரையும் வீடு தேடி வரும்: மதுரை ஐடி இளைஞரின் அசத்தல் முயற்சி
இனி கீரையும் வீடு தேடி வரும்: மதுரை ஐடி இளைஞரின் அசத்தல் முயற்சி

ஐ.டி.வேலையை உதறிவிட்டு கீரை விற்பனையில் களம் இறங்கியுள்ளார் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர். அதுவும் கீரையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இணையதளத்தையும் துவக்கியுள்ளார்.

வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி ஆடை, அணிகலன், புத்தகம், உணவு வரை இணையத்தளத்தில் வாங்கும் நடைமுறை நாளுக்கு நாள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கீரையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இணையத்தளத்தை துவக்கியுள்ளார் மதுரையை சேர்ந்த ஸ்ரீராம் பிராசாத்.

"கீரைக்கடை.காம்" எனும் இணையத்தளத்தின் பெயரிலேயே கோவை சாய்பாபா காலனி பகுதியில் கீரைகளுக்கென பிரத்யேக கடையை நடத்தி அசத்தி வருகிறார் ஸ்ரீராம் பிரசாத். மென்பொருள் நிறுவன பணியில் ஏற்பட்ட சோர்வும், அழுத்தமுமே இந்த தொழிலுக்கு வர காரணம் என்றாலும், தங்களின் பூர்வீக தொழில் விவசாயம் என்றும் தெரிவிக்கிறார் ஸ்ரீராம் பிரசாத். இதுதவிர, சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் அளவில்லாத ஈடுபாடு இருந்ததாகவும் ஸ்ரீராம் பிரசாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீராம் பிரசாத் மேலும் கூறும்போது, “ கீரைக்கடை.காம் கடையில் தற்போது 40 வகையான நாட்டு கீரைகளை விற்பனை செய்து வருகிறோம். அதை 100 ஆக உயர்த்துவது, கீரை சூப், கீரை வடை என கீரை விற்பனையை விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளது. குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் கீரைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பான தகவலை விளக்கவும், புரிந்துக்கொள்ள வைக்கவும் இதுபோன்ற கீரைகளுக்கென பிரத்யேக கடை உதவும்.  கீரை கிடைப்பதில் உள்ள சிக்கல், பணிக்கு செல்பவர்கள் என அனைத்து வகையான இடையூறுகளுக்கும் ஆன்லைன் விற்பனை முறை பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com