Published : 08,Feb 2018 05:30 AM

ராகுல் டிராவிட்டுக்கு ரூ.2.43 கோடி வழங்கியது பிசிசிஐ!

This-is-what-cricket-legend-Rahul-Dravid-gets-as-fees-from-BCCI

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தொழில்முறை கட்டணமாக ரூ.2.43 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.

நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் வென்று இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு இது 4-வது சாம்பியன் கோப்பை. இந்த நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 2017ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான 6 மாத காலத்துக்கு, தொழில்முறை கட்டணமாக, ரூ.2.43 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.

பந்து வீச்சுப் பயிற்சியாளர் பராஸ் ஹம்பரேவுக்கு நான்கு மாதத் தொகையாக, ரூ.27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்