சீனாவை சேர்ந்த 7 வயது சிறுவன் யோகா மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த சிறுவன் சுயாங்(7). ஆட்டிசம் குறைப்பாட்டில் பாதிக்கப்பட்டிருந்த இந்தச் சிறுவன் தனது 2வயதில் இருந்து யோகா கற்கத்தொடங்கியுள்ளான். அதன் பின் இந்த நோய் குறைப்பாட்டில் இருந்து படிப்படியாக மீண்டுள்ளான். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் யோகா பயிற்சியை முறையாகக் கற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழை பெற்றுள்ளான். யோகா மூலம் இந்தச் சிறுவன் சீனாவில் பிரபலமடைந்துள்ளான்.இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு யோகா கற்றுக் கொடுத்துள்ள சுயாங், இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளான். சிறுவன் சுயாங்கிடம் யோகா கற்றுக்கொள்ள சீன மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த 2000ஆம் வருடத்திற்கு பின்பு சீனாவில் யோகா பிரபலமடைந்துள்ளது. சீனாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட யோகா மையங்கள் உள்ளன. இந்தியாவை போன்றே சீனாவிலும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix